ஆக்கிரமிப்பில் இருந்த சத்தியமங்கலம் முத்துமாரியம்மன் கோயில்: நீதிமன்ற உத்தரவின்படி அகற்றம்


ஈரோடு: சத்தியமங்கலத்தில் நீதிமன்ற உத்தரவின்படி, பழமையான முத்துமாரியம்மன் கோயில் இடித்து அகற்றப்பட்டது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் திம்மையன்புதூர் பகுதியில் பழமையான முத்து மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் ஆக்கிரமிப்பில் இருப்பதாக கூறி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. வழக்கை விசாரித்த உயர்நீதி மன்றம் ஆக்கிரமிப்பு நிலத்தில் உள்ள கோயிலை அகற்ற உத்தரவிட்டது.

இதன் அடிப்படையில் நேற்று காலை ஆக்கிரமிப்பில் உள்ள கோயிலை இடிக்கும் பணி தொடங்கியது. நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்ட பொறியாளர் சவுந்திர ராஜன், சத்தியமங்கலம் வட்டாட்சியர் சக்திவேல், டிஎஸ்பி சரவணன் ஆகியோர் முன்னிலையில் முத்துமாரியம்மன் கோயில் ஆக்கிரமிப்பை நெடுஞ்சாலைத் துறை மற்றும் வருவாய்த் துறையிர் அகற்றினர்.

கோயிலில் இருந்த விநாயகர் சிலை, நேரு நகர் சோங்க கருப்பராயன் கோயிலில் வைக்கப்பட்டது. மற்ற சிலைகள் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டன. கோயிலை அகற்றும் பணியின் போது பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

x