சாலையில் நடந்து சென்றபோது திடீரென மயங்கி விழுந்து ஆசிரியை உயிரிழப்பு: உடுமலை சோகம்


திருப்பூர்: உடுமலையில் சாலையில் நடந்து சென்றபோது திடீரென மயங்கி விழுந்து தனியார் பள்ளி ஆசிரியை உயிரிழந்தார்.

உடுமலை நகராட்சிக்குட்பட்ட சங்கிலி நாடார் வீதியில் வசித்து வந்தவர் மாலதி (25). இவர், தளி சாலையிலுள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். சம்பவத்தன்று உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, அருகே உள்ள வீட்டுக்கு திரும்பிச் சென்றார். அப்போது, திடீரென மயங்கி விழுந்தார். அவரை உறவினர்கள் மீட்டு, உடுமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினரிடம் சடலத்தை ஒப்படைத்தனர். இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். உயிரிழந்த மாலதிக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.

x