செங்கோட்டை, நாகர்கோவில் ரயில்களில் கூடுதலாக 6 பெட்டிகள் இணைப்பு: பயணிகள் மகிழ்ச்சி


சென்னை: கோடை விடுமுறையில் கூட்ட நெரிசலை குறைப்பதற்காக தாம்பரம் - செங்கோட்டை சிலம்பு மற்றும் தாம்பரம் - நாகர்கோவில் அதிவிரைவு ரயில்களில் இன்று முதல் 6 கூடுதல் பெட்டிகள் இணைத்து இயக்கப்பட உள்ளது.

இது குறி்த்து என தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிப்பதற்காக தாம்பரம் - செங்கோட்டை சிலம்பு அதிவிரைவு ரயிலில் (வண்டி எண்.20681) ஒரு ஏசி 2 அடுக்கு பெட்டி, 2 ஏசி 3 அடுக்கு பெட்டி, 2 தூங்கும் வசதி கொண்ட பெட்டி மற்றும் ஒரு பொதுப் பெட்டி என மொத்தம் 6 பெட்டிகள் இன்று (1-ம் தேதி) முதல் வரும் ஜூன் 18-ம் தேதி வரை கூடுதலாக இணைக்கப்படும். மறுமார்க்கத்தில் இந்த ரயிலில் (20682) மேற்கண்ட பெட்டிகள் இன்றுமுதல் வரும் ஜுன் 19-ம் தேதி வரை இணைக்கப்படும்.

அதேபோல், தாம்பரம் - நாகர்கோவில் அதி விரைவு ரயிலில் (22657) மேற்கண்ட கூடுதல் பெட்டிகள் நாளை (2-ம் தேதி) முதல் வரும் ஜுன் 16-ம் தேதி வரையிலும், மறுமார்க்கத்தில் இந்த ரயிலில் (22658) மார்ச் 3 முதல் ஜுன் 17-ம் தேதி வரையும் இணைத்து இயக்கப்படும். இவ்வாறு தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

x