நான்தான் வீட்டில் ஒட்டிய சம்மனை கிழிக்க சொன்னேன் - சீமானின் மனைவி கயல்விழி


சென்னை: சீ​மானின் வீட்​டில் ஒட்​டிய சம்​மனை நான்​தான் கிழிக்​கச் சொன்​னேன் என்​றும், கைது செய்​தவர்​களை போலீ​ஸார் தாக்​கி​யுள்​ள​தாக​வும் நாம் தமிழர் கட்​சி​யின் தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமானின் மனைவி கயல்​விழி குற்​றம்​சாட்​டி​யுள்​ளார்.

இதுகுறித்து செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: சீமான் ஊரில் இல்​லாத நிலை​யில், வளசர​வாக்​கம் காவல்​துறை​யினர் சம்​மன் கொண்டு வரு​கிறார்​கள் என்ற செய்தி எனக்கு வந்​தது. எனவே காவல்​துறை​யினரிடம் கையெழுத்து போட்டு சம்​மனை வாங்​கிக்​கொள்​ளலாம் என்ற முடி​வில் இருந்​தேன். ஆனால் வீட்​டுக்கு வந்த போலீ​ஸார், எங்​களிடம் எது​வுமே தெரிவிக்​காமல், சம்​மனை கதவில் ஒட்​டி​விட்​டுச் சென்​று​விட்​டனர்.

இதையடுத்து பணி​யாளர் சுபாகரிடம், சம்​மனை படிப்​ப​தற்​காக நான்​தான் கிழித்து எடுத்​துவர சொன்​னேன். அப்​போது திடீரென வீட்​டுக்​குள் நுழைந்த நீலாங்​கரை போலீ​ஸார் பாது​காவலர் அமல்​ராஜுடன் தள்​ளு​முள்​ளு​வில் ஈடு​பட்​டனர். அதிர்ச்​சி​யடைந்த நான் அமல்​ராஜ்​தான் போலீ​ஸாரை தள்​ளி​விட்​ட​தாக நினைத்​து​ போலீ​ஸாரிடம் மன்​னிப்பு கேட்​டேன்.

போலீ​ஸாரை தாக்​க​வில்​லை: ஆனால் அமல்​ராஜ் போலீ​ஸாரை தாக்​க​வில்​லை. கதவை தள்​ளி​விட்டு வீட்​டுக்​குள் வந்த காவல்​துறை​யினர்​தான் தள்​ளு​முள்​ளு​வில் ஈடு​பட்​டனர் என தெரிய​வந்​தது. ஒரு முன்​னாள் ராணுவ அதி​காரி என்​றும் பாராமல், குப்பை மாதிரி அவரை தூக்கி போட்டு ஜீப்​பில் ஏற்​றினர். அப்​போது, தன்​னிடம் இருந்த துப்​பாக்​கியை அமல்​ராஜ் தானாகவே எடுத்து போலீ​ஸிடம் கொடுத்​திருக்​கிறார். ஆனால் தூப்​பாக்​கியைக் காட்டி மிரட்​டிய​தாக அவர் மீது வழக்கு பதிந்​துள்​ளனர்.

திட்​ட​மிட்ட சதி​: அதோடு சுபாகரை​யும் உடன் அனுப்​ப​வில்லை என்​றால் போலீஸ் படையை இறக்​கு​வோம் என்று மிரட்​டினர். இது முழுக்க காவல்​துறை​யின் திட்​ட​மிட்ட சதி​யாகும். வளசர​வாக்​கம் போலீஸார் ஒட்​டி​விட்​டுச் சென்ற சம்​மனை, நீலாங்​கரை போலீ​ஸார் ஏன் வந்து பார்க்க வேண்​டும்? சம்​மன் கிழிக்​கப்​பட்​டது தொடர்பாக போலீ​ஸார் என்​னிடம் பேசி​யிருக்​கலாமே.

அதை​விடுத்து கதவை தள்​ளி​க்கொண்டு வீட்​டுக்குள் வரவேண்​டிய அவசி​யம் என்ன? மேலும், கைது செய்த இரு​வரை​யும் காவல் நிலை​யத்​துக்கு அழைத்​துச் செல்​லாமல், ஒரு பூங்கா​வுக்கு அழைத்​துச் சென்று அடித்​திருக்​கின்​றனர். அதன்​பின் காவல் நிலை​யத்​தி​லும் இரும்பு கம்​பி​யில் துணியை சுற்​றி​ அடித்​துள்​ளனர். அவர்​கள் அப்​படி என்ன தப்பு செய்​தார்​கள்? சீமான் ஊரில் இல்லை என தெரிந்​திருந்​தும் வேண்​டுமென்றே காவல்​துறை​யினர்​ இதை​ செய்​துள்​ளனர்​. இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

x