திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் வலங்கை மான் அருகே கோவிந்தகுடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள் ளியின் 113-வது ஆண்டு விழா இன்று(பிப்.28) நடைபெறுகிறது.
1913-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தப் பள்ளியில், பள்ளிக் கல்வித் துறை உத்தரவின்பேரில், முன்னாள் மாணவர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகம், பள்ளி மேலாண்மைக் குழு, ஊர் பொதுமக்கள் சார்பில் இந்த ஆண்டு விழா கொண்டாடப்பட உள்ளது. பள்ளி தலைமையாசிரியர் கீதா வரவேற்கிறார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சவுந்தர்ராஜன் தலைமை வகிக்கிறார். சிறப்பு பேச்சாளர் மதிவதனி சிறப்புரையாற்றி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்குகிறார்.
இந்தப் பள்ளியில் பயின்ற பல மாணவர்கள், தற்போது அரசுப் பணியிலும், பல்வேறு முன்னணி நிறுவனங்களிலும் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் இந்த விழாவில் கவுரவிக்கப்பட உள்ளனர். எனவே, விழாவில் பொதுமக்கள், பெற்றோர்கள், முன்னாள் மாணவர்கள் பங்கேற்க வேண்டும் என பள்ளி நிர்வாகம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
"கல்வி கற்பவராக இருங்கள். கற்பிப்பவர்களாக இருங்கள் அல்லது கற்பவருக்கும், கற்பிப் பவருக்கும் உதவியாக இருங்கள்" என்ற இறை மொழிக்கு ஏற்ப, இப்பள்ளியில் பயின்ற மாணவர்கள் 13 பேர் தொடங்கிய இளைஞர் நற்பணி மன்றம், இதே ஊரில் யூத் வெல்ஃபேர் மெட்ரிகு - லேஷன் மேல்நிலைப் பள்ளியை 37ஆண்டுகளுக்கு முன்பே தொடங்க இங்கு பெற்ற கல்வியே விதையாக இருந்தது என கோவிந்தகுடி கல்வி அறக்கட்டளையினர் தெரிவித்துள்ளனர்.