திண்டுக்கல்: பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்திய தங்கம், வெள்ளிப் பொருட்கள் மற்றும் பணத்தை மாதம் ஒரு முறையும், திருவிழாக் காலங்களில் இரு முறையும் எண்ணப்படுவது வழக்கம்.
அதன்படி, கடந்த 2 நாட்களாக இணை ஆணையர் மாரி முத்து தலைமையில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. துணை ஆணையர் வெங்கடேஷ், உதவி ஆணையர் லட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி மாணவ, மாணவிகள், கோயில் பணியாளர்கள் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். அதில், ரூ.3 கோடியே 47 லட்சத்து 5 ஆயிரத்து 568 ரொக்கம், தங்கம் 379 கிராம், வெள்ளி 44,067 கிராம், வெளிநாட்டு கரன்சிகள் 1613 கிடைத்துள்ளன.