திருச்சி: திமுக கொள்கை பரப்புச் செயலாளர் எம்.பி.திருச்சி சிவாவின் மகன் திருச்சி சூர்யா. இவர் சில காலம் பாஜகவில் இருந்தார். பின்னர் அந்த கட்சியில் இருந்து விலகி. தற்போது எந்த கட்சியிலும் சேராமல் உள்ளார்.
இந்நிலையில், திருச்சி சண்முகா நகரில் உள்ள வீட்டு முன் நிறுத்தி இருந்த சூர்யாவின் காரின் முன்பக்க கண்ணாடியை சிலர் நேற்று முன்தினம் இரவு உடைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருச்சி சூர்யா அளித்த புகாரின் பேரில், சோமரசம்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.