விருதுநகர்: இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ.85 லட்சம் வசூல்


விருதுநகர்: இருக்கன்குடி மாரியம்மன் கோயில் உண்டியலில் காணிக்கையாக ரூ.85 லட்சம் கிடைத்தது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் ஒவ்வொரு மாதமும் உண்டியல் திறக்கப்படுவது வழக்கம். நேற்று உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்பட்டன. 11 நிரந்தர உண்டியல்கள் மூலம் ரூ.84.63 லட்சம் காணிக்கையாகக் கிடைத்தது. மேலும், 119 கிராம் தங்கம், 1 கிலோ 10 கிராம் வெள்ளி கிடைத்தன.

காணிக்கை எண்ணிக்கை என்னும் பணியில் சாத்தூர், துலுக்கபட்டி கோவில்பட்டி மதுரை பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் குழுவினர் மற்றும் ஐயப்ப சேவா சங்கத்தினர், கோயில் ஊழியர்கள் ஈடுபட்டனர். இந்து அறநிலையத் துறை விருதுநகர் உதவி ஆணையர் நாகராஜன் மற்றும் இருக்கன்குடி மாரியம்மன் கோயில் உதவி ஆணையர் இளங்கோவன் ஆகியோர் முன்னிலையில் பரம்பரை அறங்காவலர் குழுத் தலைவர் ராம மூர்த்தி தலைமையில் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது.

x