கரூர்: பள்ளபட்டியைச் சேர்ந்தவர் எம்ஜேஆர் ஆசிக். இவர், பள்ளபட்டி பேருந்து நிலையத்தில் அண்மையில் ஒன்றரை பவுன் சங்கிலி, கம்மல் இருந்த பையை தவறவிட்டுள்ளார். இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த அபுவிடம் தெரிவித்துள்ளார். அபு தனது வாட்ஸ்அப் குழுக்களில் இந்த தகவலை பகிர்ந்துள்ளார்.
இதையடுத்து, அந்த வழியில் நகை பையை எடுத்த அதே பகுதியைச் சேர்ந்த ஜைலாப்பா என்பவர், வாட்ஸ்-அப் குழுவில் வந்த தகவலை பார்த்து அபுவிடம் தகவல் தெரிவித்துள்ளளார். பின்னர், நகையை தொலைத்தவரிடம் அபு முன்னிலையில் ஜைலாப்பா நகை பையை நேற்று ஒப்படைத்தார். நகை பெற்றுக்கொண்டவர் நன்றி தெரிவித்தார்.