காவல்நிலையத்தில் பெண் பாலியல் வன்கொடுமை: ஓய்வுபெற்ற இன்ஸ்பெக்டர், போலீஸாருக்கு 9 ஆண்டுகள் சிறை


திண்டுக்கல்: செம்பட்டி அருகே சேடப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி சக்திவேல். இவரது மனைவி கவுசல்யா. இவரை, கடந்த 2001ம் ஆண்டில் நகைகள் திருடியது தொடர்பாக விசாரிக்க, செம்பட்டி காவல் நிலையத்துக்கு போலீஸார் அழைத்துச் சென்றனர். அப்போது, அங்கு ஆய்வாளராக பணிபுரிந்த ரெங்கசாமி, போலீஸார் வீரத்தேவர், சின்னத்தேவர் ஆகியோர் கவுசல்யாவுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர்.

இதனால் மனமுடைந்த கவுசல்யா, வீட்டின் அருகேயுள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்ய முயன்றார். இவரை அக்கம் பக்கத்தினர் காப்பாற்றினர். அதையடுத்து, கவுசல்யாவின் கணவர் சக்திவேல் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து திண்டுக்கல் கோட்டாட்சியர் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு, அதன் அறிக்கை திண்டுக்கல் மாவட்ட முதன்மை சார்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இதை விசாரித்த முதன்மை சார்பு நீதிபதி தீபா, ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளர் ரெங்கசாமி மற்றும் போலீஸார் வீரத்தேவர், சின்னத்தேவர் ஆகியோருக்கு தலா 9 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.36 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

x