சென்னை: ‘2026-ம் ஆண்டு மே மாதம் வரை பொறுத்திருங்கள். நன்றி கெட்டவர்கள் தூக்கி எறியப்படுவார்கள்’ என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: ஒரு விதை வளருகிறது என்று சொன்னால், அங்கு சத்தமிருக்காது. ஆனால், மரம் விழுகிறது என்று சொன்னால் பலத்த சத்தம் இருக்கும். சத்தம் எங்கு இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும். அது அழிவுப் பாதையை நோக்கிச் செல்கிறது. அது ஒரு மூழ்கும் கப்பல். அதில் யாரும் ஏறமாட்டார்கள்.
அழிவிலிருந்து மீட்டெடுக்க வேண்டுமானால், நன்றி மறந்த, துரோகத்தின் மறுஉருவமாக விளங்கும், ஆணவச் செருக்குடைய, பொய்மையின் மறுவடிவமாக திகழும் நயவஞ்சகம் அகற்றப்பட வேண்டும்.
செய் நன்றி மறந்த பாவத்திலிருந்து விடுபட வேறு மார்க்கம் இல்லை என்பது வள்ளுவரின் வாக்கு. 2026-ம்ஆண்டு மே மாதம்வரை பொறுத்திருங்கள். தமிழகப் பூமியை ஆளப் போவது யார் எனதெரியும். நன்றி கெட்டவர்கள் தூக்கி எறியப்படுவார்கள். துரோகம் நிச்சயம் வீழும். நயவஞ்சகம் வெற்றி பெறாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.