சென்னை: சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்கள் அனைத்துத் தரப்பினரையும் சென்றடையும் வகையில் மண்டல அளவிலான சாராஸ் கண்காட்சிகள், வட்டார, மாவட்ட மற்றும் மாநில அளவிலான விற்பனைக் கண்காட்சிகள், கல்லூரிச் சந்தைகள் போன்றவை தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மூலம் அவ்வப்போது நடத்தப்பட்டு வருகின்றன.
அதேபோல் இணைய வழி விற்பனையில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்ய ஏதுவாக, அமேசான், ஃபிலிப்கார்ட், மீசோ, இந்தியா மார்ட், ஜியோ மார்ட் போன்ற முன்னணி இ-வர்த்தக தளங்களிலும் மொத்தம் 4,235 பொருட்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு, தமிழகம் முழுவதும் விற்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் மதி அனுபவ அங்காடி, சிறுதானிய உணவகங்கள், இயற்கை அங்காடி, மதி நடமாடும் விற்பனை வாகனம் மற்றும் இ-வர்த்தக தளங்களின் வாயிலாக இதுவரை ரூ.194.57 கோடி மதிப்பிலான சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருட்கள் விற்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.