விழுப்புரம்: நாட்டிற்கு சேவை செய்தவர்களை கௌரவிக்கும்வகையில் மத்திய உள்துறை அமைச்சகம் அட்டி உத்கிருஷ்ட் சேவா பதக்கம் என்ற பெயரில் சேவையை பாராட்டி ஆண்டுதோறும் விருதுகள் வழங்கிவருகிறது.
அந்தவகையில் கடந்த 2020ம் ஆண்டு சிறந்த முறையில் பணியாற்றி சேவை புரிந்தமைக்காக விழுப்புரம் மாவட்ட தனிப்பிரிவு தலைமை இடத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, பணியாற்றிவரும் உதவி ஆய்வாளர் ராதாகிருஷ்ணன், உதவி ஆய்வாளர் கந்தசாமி, தலைமை காவலர் அசோக்குமார் ஆகியோருக்கு மத்திய உள்துறை அமைச்சகத்தின் (UTI UTKRISHT SEVA PADAK) ''அட்டி உத்கிருஷ்ட் சேவா பதக்கம்'' வழங்கப்பட்டது.
இப்பதக்கத்தை இன்று விழுப்புரம் மாவட்டமாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் விருது பெற்ற காவல் அலுவலர்களுக்கு வழங்கி பாராட்டினார். அட்டி உத்கிருஷ்ட் சேவா பதக்கம் என்பது தேசத்திற்கு சேவை செய்தவர்களை அங்கீகரிப்பதற்காக மத்திய உள்துறை அமைச்சகத்தால் வழங்கப்படும் பதக்கம் என்பது குறிப்பிடதக்கது.