ஈரோடு: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஈரோட்டைச் சேர்ந்தவர் ஷேக் சதாம் உசேன் (24). தொழிலாளி. இவர் 16 வயது சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். கடந்த 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக, ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ஷேக் சதாம் உசேனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு விசாரணை ஈரோடு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிந்த நிலையில், ஷேக் சதாம் உசேனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.