திண்டுக்கல்: நத்தம் அருகேயுள்ள சமுத்திரப்பட்டியைச் சேர்ந்தவர் சூர்யா (22). இவர் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் சிறுமி கர்ப்பமடைந்தார்.
இது குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில், நத்தம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து சூர்யாவை கைது செய்தனர். இந்த வழக்கு, திண்டுக்கல் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் ஜோதி வாதாடினார். வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதி ஜி.சரண் நேற்று தீர்ப்பளித்தார். அதில் குற்றம்சாட்டப்பட்ட சூர்யாவுக்கு 27 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.