காளியம்மாள் நாதகவிலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகினார்: வெளியானது பரபரப்பு அறிக்கை


சென்னை: நாம் தமிழர் கட்சியில் இருந்து அக்கட்சியின் மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் அதிகாரப்பூர்வமாக விலகியுள்ளார்

நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் அக்கட்சியிலிருந்து விலகியுள்ளார். இத்தனை நாட்கள் என்னுடன் உண்மையாய், உறவாய் பழகிய பயணித்த அத்தனை உறவுகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றி. நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதுடன், வருத்தங்களையும் பகிர்ந்து கொள்கிறேன் என காளியம்மாள் தெரிவித்துள்ளார்

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘கடந்த 6 ஆண்டுகளாக சமூக மாற்றத்துக்காக ஒரு பெண்ணாக இருந்து எவ்வளவு போராட முடியுமோ, என் ஆற்றலையும் மீறி இந்த களத்தில் நின்றிருக்கிறேன். என்றும் தமிழ்த் தேசியத்தை விதைக்கும் வழியில் என் பயணம் தொடரும்’ என காளியம்மாள் தனது விரிவான அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

x