திருச்செந்தூர் கோயில் ராஜகோபுரத்தில் இரவில் ஒளிரும் பிரமாண்ட வேல்: பக்தர்கள் பரவசம்


திருச்செந்தூர்: சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பெருந்திட்ட வளாக பணிகள் மற்றும் கும்பாபிஷேக திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் ஒரு பகுதியாக கோயில் ராஜகோபுரம், கும்ப கலசங்கள் சீரமைக்கப்பட்டுள்ளன.

ராஜகோபுரத்தில் முருகனுக்கு வெள்ளை நிறத்தில் (பிளாஸ்ட் ஆஃப் பாரிஸ்) ரசாயனம் கலந்து அடிக்கப்பட்டு வருகிறது. மேலும், ராஜகோபுரத்தில் மின் விளக்கால் வடிவமைக்கப்பட்ட 40 அடி உயரம் கொண்ட லைட்டிங் வேல் பொருத்தப்பட்டிருந்தது. திருப்பணி வேலைகளின் போது, அந்த பழைய வேல் அகற்றப்பட்டு புதிய வேல் பொருத்தம் பணி நடைபெற்று வருகிறது.

இந்த வேலின் கீழ் பகுதியில் இருக்கும் ‘ஓம்’ என்ற வாசகம் சிவப்பு வண்ணத்தில் ஜொலிக்க உள்ளது. இந்த வேல் முழுவதும் நவீன மின் விளக்குகள் மூலம் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலின் மேல் பகுதியில் திருநீறு பூசியது போல் மூன்று கோடுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த புதிய வேல் சென்னையில் ஒரு மாத காலமாக தயார் செய்யப்பட்டு கோயிலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

x