பெரம்பலூரில் பிப்.27-ல் வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி முகாம்: விவசாயிகள் பயன்பெறலாம்!


பெரம்பலூர்: பெரம்பலூர் கால்நடை பல்கலைக் கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத் தலைவர் சுரேஷ்குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு: செங்குணம் கைக்காட்டி எதிரே உள்ள கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக ஆராய்ச்சி மையம் சார்பில், வெள்ளாடு வளர்ப்பு குறித்த ஒருநாள் இலவச பயிற்சி முகாம் பிப்.27-ம் தேதி நடைபெற உள்ளது.

இதில் வெள்ளாடு இனங்கள் மற்றும் இனப் பெருக்க மேலாண்மை, தீவன மேலாண்மை, கொட்டகை அமைக்கும் முறை, பராமரிப்பு மற்றும் நோய்த் தடுப்பு முறைகள் குறித்து பயிற்சியில் சேர விரும்புவோர். மையத்துக்கு நேரிலோ அல்லது 9385 307022, 91235 48890 ஆகிய இலவச எண்களிலோ தொடர்பு கொண்டு பெயரைப் பதிவு வெள் செய்து கொள்ள வேண்டும்.

x