கோவை: பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா பகுதிகளில் ஒரு டன் இளநீர் பண்ணை விலை ரூ.14,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக, ஆனைமலை இளநீர் உற்பத்தியாளர்கள் சங்க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, "தற்போது அனைத்து பகுதியிலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. அதே சமயம், இளநீர் வரத்து மிகவும் குறைந்து கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இளநீர் தேவை அதிகரிப்பால், தமிழகம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் இளநீருக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், இளநீரின் தேவையும் அதிகரித்து வருகிறது.
வரக்கூடிய வாரங்களில் இளநீரின் விலை தொடர்ந்து உயரும் என்பதால், நல்ல தரமான குட்டை நெட்டை வீரிய ஒட்டு இளநீரின் விலை கடந்த வார விலையான ரூ.34-ல் இருந்து ரூ.2 உயர்த்தப்பட்டு, இன்றுமுதல் (பிப்.24) ரூ.36 எனவும், ஒரு டன் இளநீரின் விலை ரூ.14,000 எனவும் நிர்ணயம் செய்யப்படுகிறது" என்றார்.