சட்டம் ஒழுங்கு சீர்கேடு அவலங்களில் இருந்து மக்களை மடைமாற்றம் செய்வதற்காக இந்தி எதிர்ப்பை கையில் எடுத்த திமுக: டிடிவி குற்றச்சாட்டு


சென்னை: அரசின் அவலங்​களில் இருந்து மக்களை மடைமாற்றம் செய்​வதற்காக இந்தி எதிர்ப்பை திமுக கையில் எடுத்​துள்ளது என்று அமமுக பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் குற்​றம்​சாட்​டி​னார்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்​தின் புதிய தலைமை அலுவல​கத்தை சென்னை அடையாறில் திறந்து வைத்த கட்​சி​யின் பொது செய​லாளர் டிடிவி தினகரன் பின்னர் செய்தி​யாளரிடம் கூறிய​தாவது: தமிழகத்​தில் சட்டம் ஒழுங்கு சீர்​கெட்டு உள்ளது. கொலை, கொள்ளை வழிப்​பறி, பாலியல் குற்​றங்​கள், போதை கலாச்​சாரம் வெகுவாக அதிகரித்​துள்ளன. இந்த அவலங்​களில் இருந்து மக்களை மடைமாற்றம் செய்​வதற்காக திமுக இந்தி எதிர்ப்பை கையில் எடுத்​துள்ளது. தமிழகத்​தில் இருமொழிக் கொள்​கை​யையே பெரும்​பாலான மக்கள் விரும்​பு​கின்​றனர். அதைத்​தான் நாங்​களும் விரும்​பு​கிறோம்.

அதேநேரத்​தில் மத்திய அரசு தேசிய கல்விக் கொள்கை மூலம் மூன்​றாவதாக ஒரு மொழியை படிக்க வேண்​டும் என்று​தான் சொல்​கிறது. இந்தி​யைதான் படிக்க வேண்​டும் என்று சொல்ல​ வில்லை.

இந்த விஷயத்​தில் அரசியல் செய்​யாமல் மத்திய அரசை அணுகி தேவையான நிதியை பெற தமிழக அரசு முயற்சிக்க வேண்​டும். அரசு பள்ளி மாணவர்​களுக்கு சிபிஎஸ்​சி-க்கு இணையான தரமான கல்வியை கொடுக்க முன்வர வேண்​டுமே தவிர, மத்திய அரசு நிதி ஒதுக்க​வில்லை என்று அரசியல் செய்வதை திமுக நிறுத்​திக் கொள்ள வேண்​டும்.

தமிழகத்​தில் 69 சதவீத இடஒதுக்​கீட்டை உறுதி செய்​வதற்கு சாதிவாரி கணக்​கெடுப்பு அவசி​யம். இப்போதும் நாங்கள் தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யில்​தான் நீடிக்​கிறோம். 2026 தேர்​தலில் திமுகவை வீழ்த்துவதே எங்கள் நோக்​கம். திமுக கூட்​ட​ணிக்கு எதிராக பலமான கூட்​ட​ணியாக என்டிஏ இருக்​கும். திமுக அரசின் அவலங்​களுக்கு எதிர்க்​கட்​சிகள் எதிர்ப்பு தெரி​வித்து வரு​கின்றன. வரும் தேர்​தலில் கெட்​அவுட் ​திமுக என மக்​கள் தீர்ப்​பளிப்​பார்​கள். இவ்வாறு கூறினார்​.

x