அதிமுக ஒன்றிணைந்தால்தான் 2026 பேரவை தேர்தலில் வெற்றி: ஓ.பன்னீர்செல்வம் கருத்து


முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: திராவிட வரலாற்றில் இரு மொழிக் கொள்கைதான் உள்ளது. அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதாவை தொடர்ந்து நான் முதல்வராக இருந்தபோதும் இருமொழிக் கொள்கைதான் தேவை என தீர்மானம் நிறைவேற்றினோம்.

அதிமுகவில் பிரிந்தவர்கள் ஒன்றிணைந்தால் மட்டுமே வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற முடியும். அதிமுக, பாஜக கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு செய்வார்கள்.

அதிமுக தொண்டர்கள் யாரும், எந்தக் கட்சிக்கும் செல்ல மாட்டார்கள். விஜய் இதுவரை தேர்தலில் நின்று, மக்கள் தீர்ப்பைப் பெறவில்லை. எனவே, மக்களின் தீர்ப்புக்குப் பின்னர்தான், அவரது கட்சி பற்றி கருத்துகூற முடியும். இவ்வாறு அவர் கூறினார்

x