மகா சிவராத்திரியை முன்னிட்டு வரும் 26-ம் தேதி (புதன்கிழமை) கன்னியாகுமரி மாவட்டத்தில் மாநில அரசு அலுவலகங்கள், அனைத்து கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறைக்கு ஈடாக மார்ச் 2-வது சனிக்கிழமை (8-ம் தேதி) வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் அய்யா வைகுண்டசாமி பிறந்த நாள் விழாவான மார்ச் 4-ம் தேதி (செவ்வாய்கிழமை) கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விடுமுறைக்கு ஈடாக மார்ச் நான்காவது சனிக்கிழமை (22-ம் தேதி) வேலைநாளாகும்.
மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் மாசி கொடைவிழாவை முன்னிட்டு மார்ச் 11-ம் தேதி (செவ்வாய்கிழமை) குமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதற்கு ஈடாக ஏப்ரல் நான்காவது சனிக்கிழமை (12-ம் தேதி) வேலை நாளாக இருக்கும் என, மாவட்ட ஆட்சியர் அழகுமீனா உத்தரவிட்டுள்ளார்.