20 ஆண்டுகளுக்கு முன்பே அரசியலுக்கு வந்திருக்க வேண்டும்; அதுதான் என் தோல்வி - கமல் வருத்தம்


சென்னை: கடைசி ஒரு வாக்காளர் இருக்கும் வரை நம் பணி தொடரும். ரசிகர்கள் வேறு; வாக்காளர்கள் என்பது தான் நான் என் அனுபவத்தில் தெரிந்துகொண்டது என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் 8ம் ஆண்டு தொடக்க விழாவை ஒட்டி சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியினர் மத்தியில் பேசிய நடிகரும், மநீம தலைவருமான கமல் ஹாசன், 20 ஆண்டுகளுக்கு முன்பு நான் அரசியலுக்கு வந்திருக்க வேண்டும். அப்படி வராதது தான் என் தோல்வி என நினைக்கிறேன். 20 ஆண்டுகளுக்கு முன்பே நான் வந்திருந்தால், நான் இருக்கும் இடமே வேறு. கடைசி ஒரு வாக்காளர் இருக்கும் வரை நம் பணி தொடரும்.

ரசிகர்கள் வேறு; வாக்காளர்கள் என்பதுதான் நான் என் அனுபவத்தில் தெரிந்துகொண்டது. நம்மை இணைப்பது தமிழ் மொழி தான். நிதி தராசு என்பதை, நாளைய வரலாறு சொல்லும். நான் ஏதாவது பேசினால், தோற்றுப் போன அரசியல் வாதி என்பார்கள். இந்த ஆண்டு நமது குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்கப் போகிறது. அடுத்த ஆண்டு உங்கள் குரல் தமிழக சட்டமன்றத்தில் ஒலிக்கப் போகிறது" என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

x