முடிந்தால் அண்ணாசாலைக்கு வர சொல்லுங்கள்: அண்ணாமலைக்கு சவால் விட்ட உதயநிதி ஸ்டாலின்!


சென்னை: கேட்கக்கூடிய நிதியை வாங்கி தர துப்பில்லை. இவர்கள் சவால் விடுகிறார்கள். அறிவாலயம் குறித்த எதோ முன்பு சொன்னார். முடிந்தால், தைரியம் இருந்தால் முதலில் அண்ணாசாலைக்கு வர சொல்லுங்கள் என அண்ணாமலைக்கு தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சவால் விட்டுள்ளார்.

சென்னை செனாய்நகரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினிடன், அண்ணாமலை ஒருமையில் பேசியது பற்றி கேள்வி எழுப்பியபோது, ‘அது அவர்களுடைய தரம். பெரிதாக ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. பிரச்சனையை திசை திருப்ப முயற்சிக்கிறார்கள். கேட்கக்கூடிய நிதியை வாங்கி தர துப்பில்லை. இவர்கள் சவால் விடுகிறார்கள்.

இந்த நிதி தொடர்பான பிரச்சனையை திசை திருப்ப பார்க்கிறார்கள்.வால்போஸ்ட் ஒட்டுவதெல்லாம் ஒரு சாதனையா? வீட்டில் தான் இருப்பேன் வரட்டும். அறிவாலயம் குறித்த எதோ முன்பு சொன்னார். முடிந்தால், தைரியம் இருந்தால் முதலில் அண்ணாசாலைக்கு வர சொல்லுங்கள்” என்றார்.

x