கன்னியாகுமரி கண்ணாடி இழைப் பாலம்: இதுவரை 3.39 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர்!


கன்னியாகுமரி: சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு வெளிநாடுகள் மற்றும் இந்தியாவின் பிற மாநிலங்கள், தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்.

இங்கு கடல் நடுவே உள்ள விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலையை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டுகளிக்கின்றனர். விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலையை இணைக்கும் வகையில் அமைக்கப் பட்டுள்ள கண்ணாடி இழை தரைத்தள பாலம் வழியாக நடந்து சென்று கடலின் அழகையும் கண்டு ரசிக்கின்றனர். திருவள்ளுவர் சிலையை காண வரும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்காகவும், அவர்களுக்கு வழிகாட்டவும் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் நாள்தோறும் அதிகளவில் வந்து கண்ணாடி இழை பாலத்தை பார்வையிடுகின்றனர். கடந்த ஜனவரி மாதத்தில் 2 லட்சத்து 15 ஆயிரம் பேரும், பிப்ரவரி மாதம் 17-ம் தேதி வரை 1 லட்சத்து 24 ஆயிரம் பேரும் என, மொத்தம் 3.39 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர்.

x