மருதமலை கோயில் மலைப்பாதையில் 4 சக்கர வாகனங்கள் செல்ல தடை; பைக்-களுக்கும் கட்டுப்பாடு!


கோவை: மருதமலை கோயில் நிர்வாகத்தினர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘‘மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வரும் ஏப்ரல் மாதம் 4-ம் தேதி திருக்குட முழுக்கு விழா நடைபெற உள்ளது. இப்பணிகள் விரைவாக முடிக்க வேண்டிய காரணத்தால், இன்று (பிப்.20) முதல் வரும் ஏப்ரல் 6-ம் தேதி வரை அடிவாரத்தில் இருந்து மேலே உள்ள கோயிலுக்கு மலைப் பாதையில் நான்கு சக்கர வாகனங்களில் செல்வதற்கு பக்தர்களுக்கு அனுமதியில்லை.

மேலும், இன்று முதல் வரும் ஏப்ரல் 6-ம் தேதி வரை உள்ள செவ்வாய்க்கிழமை, ஞாயிற்றுக்கிழமை, கிருத்திகை மற்றும் அரசு விடுமுறை நாட்களில் இருசக்கர வாகனங்களில் மலைப்பாதையில் செல்ல அனுமதியில்லை. பக்தர்கள் அடிவாரத்தில் இருந்து கோயிலுக்கு படிக்கட்டுகள் வழியாகவும், திருக்கோயிலின் பேருந்து மற்றும் கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ள பேருந்துகளில் சென்று சுவாமி தரிசனம் செய்யலாம்’’ எனக் கூறப்பட்டுள்ளது.

x