சேலம்: சேலம் மத்திய சிறையில் கைதிகளுக்கு செல்போன் பரிமாற்றம் செய்த சிறைக் காவலரை பணியிடை நீக் செய்து சிறை கண்காணிப்பாளர் (பொ) வினோத் உத்தரவிட்டார்.
சேலம் மத்திய சிறையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். கடந்த மாதம் தருமபுரி மாவட்டத் சேர்ந்த விசாரணை கைதி முபாரக் என்பவரிடமிருந்து க அதிகாரிகள் செல்போனை பறிமுதல் செய்தனர். சிறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், சேலம் மத்திய சிறையில் முதல் நிலைக் காவலராக பணியாற்றி வரும் சண்முக குமார் (38) கைதிக்கு செல்போன் பரிமாற்றம் செய்தது தெரியவந்தது.
இதேபோல மேலும் பல கைதிகளுக்கு அவர் செல்போன் பரிமாற்றம் செய்துள்ளதும், அதற்காக அவர் வங்கிக் கணக்கில் பணம் பரிவர்த்தனை நடந்ததையும் சிறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதையடுத்து சிறைக் காவலர் சண்முககுமாரை தற்காலிக பணி நீக்கம் செய்து சிறை கண்காணிப்பாளர் (பொ) வினோத் உத்தரவிட்டார்.