புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் மண்டை யூர் அருகே சோதிராயன்காடு கிரா மத்தைச் சேர்ந்த தம்பதி சித்திர குமார்- ஜீவிதா. இவர்களது மகன் மணிகண்டன் (18), மகள் பவித்ரா (16). மணிகண்டன் எலெக்ட் ரீசியன் வேலை செய்து வந்தார். பவித்ரா, மண்டையூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். இவர்கள், பாரதிதாசன் பல்கலைக்கழகம் எதிரில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு செல்போன் பார்த்துக் கொண்டிருந்த பவித்ராவை, செல்போனை வைத்துவிட்டு படிக்குமாறு பெற்றோர் கூறியுள்ளனர். ஆனால், பவித்ரா தொடர்ந்து செல்போன் பார்த்துக் கொண்டிருந்துள்ளார். இதனால், அவரிடம் இருந்து செல்போனை பறித்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் விரக்தி அடைந்த பவித்ரா, வீட்டின் அருகே உள்ள கிணற்றில் குதித்துள்ளார். அவரைக் காப்பாற்ற மணிகண்டனும் கிணற்றில் குதித்துள்ளார். இதில், இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். நவல்பட்டு தீயணைப்பு படை யினர், கிணற்றுக்குள் இருந்து 2 பேரின் உடல்களையும் மீட்டனர். மண்டையூர் போலீஸார் விசாரிக் கின்றனர்.