மேட்டுப்பாளையம் அருகே பனை மரத்தை முறித்தது பாகுபலி யானை; மின் கம்பிகள் சேதம்!


கோவை: மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை ஆகிய பகுதியில் பாகுபலி என அழைக்கப்படும் காட்டு யானை நடமாடி வருகிறது. வனப்பகுதியில் இருந்து வெளியேறும் யானை விளைநிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. குடியிருப்புப் பகுதிகளிலும் புகுந்து வருகிறது.

இந்நிலையில், நேற்றுமுன்தினம் இரவு நெல்லித்துறை நந்தவனபுதூர் பகுதியில் வசந்தகுமார் என்பவரின் தோட்டத்தில் புகுந்த பாகுபலி யானை, அங்கிருந்த கூந்தல் பனை மரத்தை உடைத்து சாப்பிட முயன்றது. அப்போது மரம் முறிந்து விழுந்து, அருகில் சென்ற மின்கம்பிகள் அறுந்தன. பின்னர் அருகில் உள்ள தோட்டத்தில் நுழைந்து 50-க்கும் மேற்பட்ட பாக்கு மரங்களை யானை சேதப்படுத்தியது.

வனத்துறையினர் வந்து சம்பவ இடத்தைப் பார்வையிட்டனர். மேலும் மின்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு மின் இணைப்பைத் துண்டித்து அசாம்பாவிதம் நடைபெறாமல் தடுத்தனர். தொடர்ந்து மின் கம்பி செல்லும் பாதையில் நின்றிருந்த பாகுபலி யானையை அங்கிருந்து வனப்பகுதிக்குள் விரட்டி விட்டனர்.

x