சட்டப்பேரவை தேர்தலுக்கு தயாராகும் அதிமுக: கட்சி ரீதியான 82 மாவட்டங்களுக்கு பொறுப்பாளர்கள் நியமனம்


சென்னை: தமிழகத்​தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்​பேரவை தேர்​தலுக்கு தயாராகும் விதமாக அதிமுக சார்​பில் கட்சி ரீதியிலான 82 மாவட்​டங்​களுக்​கும் பொறுப்​பாளர்களை நியமித்து பொதுச்​செய​லாளர் பழனிசாமி நேற்று உத்தர​விட்​டுள்​ளார்.

தேர்​தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ள நிலை​யில், தமிழகத்​தின் பிரதான எதிர்க்​கட்​சி​யும் 30 ஆண்டு​களுக்​கும் மேல் ஆட்சி​யில் இருந்த கட்சி​யுமான அதிமுக​வும் தேர்தல் ஓட்டத்​தில் களமிறங்​கி​யுள்​ளது. அதிமுக கொள்​கைகளுக்கு பொருத்​தமான கட்சிகளை ஒருங்​கிணைத்து கூட்டணி அமைப்பது குறித்​து பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.

இதன் தொடர்ச்​சியாக நேற்று கட்சி ரீதி​யில் செயல்பட்டு வரும்மாவட்​டங்​களுக்கான தேர்தல் பொறுப்​பாளர்​களை​யும் பழனிசாமி நியமித்​துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளி​யிட்​டுள்ள அறிக்கை​: சட்டப்​பேரவை தொகுதி வாரியாக வாக்​குச்​சாவடி குழு அமைப்​பது, கட்சி வளர்ச்சி பணிகளைதுரிதப்​படுத்துவது முதலான பணிகளை விரைவாக முடிப்​ப​தற்காக கட்சி ரீதியிலான 82 மாவட்​டங்​களுக்​கும் பொறுப்​பாளர்கள் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர். அதன்​படி, திரு​வள்​ளூர் வடக்கு மாவட்டத்துக்கு முன்​னாள் அமைச்சர் சி.பொன்னையன், திருப்​பத்​தூர் மாவட்​டத்​துக்கு முன்​னாள் மத்திய அமைச்சர் தம்பிதுரை, திருச்சி புறநகர் தெற்கு மாவட்​டத்​துக்கு செ.செம்​மலை, மதுரை மாநகர் மாவட்​டத்​துக்கு பா.வளர்​மதி, திருச்சி மாநகர் மாவட்​டத்​துக்கு எஸ்.கோகுல இந்திரா, கரூர் மாவட்​டத்​துக்கு எம்.சின்னசாமி, ராணிப்​பேட்டை மேற்கு மாவட்​டத்​துக்கு சேவூர் எஸ்.ராமச்​சந்​திரன், காஞ்​சிபுரம் மாவட்​டத்​துக்கு வைகைச்​செல்​வன், கடலூர் மேற்கு மாவட்​டத்​துக்கு அண்ணா தொழிற்​சங்க பேரவை செயலாளர் ஆர்.கமலக்​கண்​ணன், வேலூர் புறநகர் மாவட்​டத்​துக்கு செஞ்சி ராமச்​சந்​திரன், தென்​காசி தெற்கு மாவட்​டத்​துக்கு அன்வர் ராஜா, திரு​வள்​ளூர் தெற்கு மாவட்​டத்​துக்கு இன்பதுரை, தென் சென்னை தென்​கிழக்கு மாவட்​டத்​துக்கு வி.சரோஜா உள்ளிட்​டோர் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர்.

பொறுப்​பாளர்கள் அனைவரும் உடனடியாக தொடர்​பு டைய மாவட்​டங்​களுக்கு சென்று, அனைத்து பணி​களை​யும் ​விரைவாக ​முடித்து, அதன் ​விவரங்களை ​மார்ச் 31-க்​குள் கட்சி தலை​மை​யிடம் சமர்ப்​பிக்க வேண்​டும். இவ்​வாறு கூறப்​பட்​டுள்​ளது.

x