சூறைக்காற்றால் கன்னியாகுமரியில் படகு சேவை பாதிப்பு: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்


சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் விடுமுறை தினமான நேற்று கேரள மாநிலம் மற்றும் வடமாநிலங்களில் இருந்து அதிகமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். அதிகாலையில் சூரிய உதயத்தை பார்த்து மகிழ்ந்த அவர்கள், பிற சுற்றுலா மையங்களையும் பார்வையிட்டனர்.

கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை மற்றும் இவற்றை இணைக்கும் கண்ணாடி நடைபாலத்தை பார்வையிடும் பொருட்டு படகு சவாரி செல்வதற்காக சுற்றுலா பயணிகள் காலை முதலே நீண்ட வரிசையில் காத்து நின்றனர்.

கடும் வெயிலில் சுற்றுலா பயணிகள் நின்றிருந்த நிலையில் சூறைக்காற்றால் மதியம் 2 மணியளவில் படகு சேவை ரத்து செய்யப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

x