பழநி முருகன் கோயில் சார்பில் 20-ம் தேதி நாட்டுச் சர்க்கரை கொள்முதல்: விவசாயிகளுக்கு அழைப்பு!


ஈரோடு: பழநி முருகன் கோயில் நிர்வாகத்தினர், கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில், 20-ம் தேதி நாட்டு சர்க்கரை கொள்முதல் செய்யவுள்ளனர்.

பழநி முருகன் கோயில் பிரசாதமான பஞ்சாமிர்தத்துக்குத் தேவையான நாட்டுச் சர்க்கரை, கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. தைப்பூசத்தை ஒட்டி பழநிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் பிரசாதத்தின் தேவையும் அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக பழநி முருகன் கோயில் தேவஸ்தான நிர்வாகத்தினர், இம்மாதத்தில் இரண்டாவது முறையாக நாட்டுச் சர்க்கரை கொள்முதல் செய்யவுள்ளனர். இதன்படி, வரும் 20-ம் தேதி பகல் 1 மணிக்கு, பழநி முருகன் கோயில் நிர்வாகம், நாட்டுச்சர்க்கரையை கொள்முதல் செய்யவுள்ளது.

எனவே, விவசாயிகள் தங்களது நாட்டுச் சர்க்கரையை கட்டி, கலப்படம் இல்லாமல், மூட்டைகளை சணல் நாரால் தைத்து, 20-ம் தேதி காலை 11 மணிக்குள் கொண்டு வர வேண்டும். மேலும், நாளை (18-ம் தேதி) முதல் நாட்டுச் சர்க்கரை மூட்டைகளை விவசாயிகள் கொண்டு வரலாம் என கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.மேலும் விவரங்களுக்கு 99445 23556 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

x