குமுளி: தமிழக - கேரள எல்லையில் குமுளியில் உள்ள பெரியாறு புலிகள் சரணாலயத்தில் புலி, காட்டெருமை, யானை, சிறுத்தை, கரடி உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் உள்ளன. வனவிலங்குகள் அவ்வப்போது குடியிருப்பு பகுதிக்குள் நுழை வதும், பொதுமக்கள் அவற்றை விரட்டும் நிலையும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் குமுளி விஸ்வநாதபுரம் குடியிருப்பு பகுதியில் நேற்று நண்பகல் 12 மணியளவில் காட்டெருமை ஒன்று நுழைந்தது. இது தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ள பகுதியாகும்.
திடீரென காட்டெருமை அப்பகுதிக்கு வந்ததால் பொது மக்கள் அச்சம் அடைந்தனர். ஓரமாக ஒதுங்கிச் சென்று பாதுகாப்பான பகுதியில் நின்று கொண்டனர். ஒரு மணி நேரத் துக்கு மேல் திரிந்த காட்டெருமை பின் வனப் பகுதிக்குள் சென்றது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், புலி, சிறுத்தையை தொடர்ந்து தற்போது காட்டெரு மையும் குடியிருப்பு பகுதிக்குள் வந்துள்ளது. எந்த நேரத்திலும் வனவிலங்குகள் வரும் என்பதால் குழந்தைகளை கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டியுள்ளது.
விலங்குகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வனத்துறையிடம் கோரிக்கை விடுத்தால், வனவிலங்குகளின் படத்துடன் எச்சரிக்கைப் பலகை மட்டும் வைத்து விட்டுச் சென்றுள்ளனர் என்றனர்.