சூளகிரி அருகே 6 மாத குழந்தையை கொன்ற தந்தைக்கு இரட்டை ஆயுள் தண்டனை


கிருஷ்ணகிரி: சூளகிரி அருகே ஆறு மாத ஆண்குழந்தையை கொன்ற தந்தைக்கு ஓசூர் நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனை வழங்கியது.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே சப்படி கிராமத்தைச் சேர்ந்தவர் முனியப்பன் (45). இவருக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், அதே பகுதியில் கணவனை இழந்த வரலட்சுமி என்பவருக்கும், முனியப்பனுக்கும் தவறான பழக்கம் ஏற்பட்டது. இவர்களுக்கு ஆண் குழந்தையும் பிறந்தது. இதனையடுத்து முனியப்பன் இந்த குழந்தையை, கடந்த 28.09.2011-ம் ஆண்டு கொலை செய்துவிட்டு அப்பகுதியில் உள்ள பாறையில் மறைத்து வைத்தார்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த சூளகிரி போலீஸார் முனியப்பனை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு ஓசூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. நேற்று முனியப்பனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறப்பட்டது.

x