அரூர்: சாலையில் சென்ற கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள தென்கரைக்கோட்டையைச் சேர்ந்தவர் ஆசிப்கான். இவர் தனக்கு சொந்தமான காரில் அரூர் நோக்கி சென்றார். எச்.தொட்டம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது கார் இன்ஜினில் இருந்து கரும்புகை வந்துள்ளது. உடனே ஆசிப்கான் காரை நிறுத்தி இறங்கினார். அப்போது, கார் தீப்பிடித்து எரிந்தது. அக்கம் பக்கம் இருந்தவர்கள் தீயை அணைக்க முயன்றும் முடியாத நிலையில் அரூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் கார் முற்றிலும் எரிந்து சேதமானது. இதுகுறித்து அரூர் போலீஸார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் பேட்டரியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ பிடித்தது தெரியவந்தது. தொடர்ந்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.