விடுதிகளில் சந்தேகத்துக்குரியவர்கள் தங்கினால் தகவல் தெரிவிக்க வேண்டும்: நாகை காவல்துறை எச்சரிக்கை


நாகை: காவல் துறை சார்பில் நாகை, நாகூர், வெளிப்பாளையம் பகுதிகளில் உள்ள தனியார் தங்கும் விடுதி உரிமையாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நாகையில் நேற்று நடைபெற்றது.

கூட்டத்துக்குத் தலைமை வகித்து நாகை டிஎஸ்பி ராமச்சந்திர மூர்த்தி பேசியது: விடுதிகளில் தங்கும் வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட வெளிநாட்டினரின் அடையாள அட்டைகளை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். சந்தேகத்துக்கு உரியவராக இருந்தால், காவல் நிலையத்துக்கு தகவல் அளிக்க வேண்டும். தங்கும் விடுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும். குறிப்பாக, விடுதியில் தங்குவோரின் விவரங்களை காவல் துறைக்கு தினமும் தெரிவிக்க வேண்டும் என்றார். இக்கூட்டத்தில் வெளிப்பாளையம் காவல் ஆய்வாளர் சுப்ரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

x