ஓசூரில் மலைத்தேனீக்கள் கொட்டியதில் 4 பேர் காயம் - அச்சத்தில் உறைந்துள்ள பொதுமக்கள்


ஓசூரில் மலைத் தேனீக்கள் கொட்டியதில், 4 பேர் காயம் அடைந்து, மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஓசூர் வாஸ்து சாலா என்ற பகுதியில் 500-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள ஒரு வீட்டின் மேல் பகுதியில் மலைத் தேனீக்கள் கூடு கட்டி உள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் கூட்டிலிருந்து கலைந்த பறந்த மலைத்தேனீக்கள் சாலையில் நடந்து சென்ற பொதுமக்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் சென்றவர்களைக் கொட்டியது.

இதில், இருசக்கர வாகனத்தில் சென்ற சின்னமுத்து (63). வசந்த் (40) உள்ளிட்ட 4 பேர் காயம் அடைந்தனர். இதையடுத்து, 4 பேரும் ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிசைக்குச் சேர்க்கப்பட்டனர்.

x