மாநிலங்களவை எம்.பியாகிறார் கமல்ஹாசன்: நேரில் சந்தித்தார் உதயநிதி ஸ்டாலின்!


சென்னை: மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்துள்ளார். கமல்ஹாசனுக்கு மாநிலங்களவை எம்.பி பதவி வழங்கவுள்ளதையொட்டு இச்சந்திப்பு நடந்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் - கலைஞானி கமல்ஹாசன் சாரை இன்று அவருடைய இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தோம். அன்போடு வரவேற்று அரசியல், கலை என பல்வேறு துறைகள் சார்ந்து கருத்துக்களை பரிமாறிக்கொண்ட கமல் சாருக்கு என் அன்பும், நன்றியும்’ என்று தெரிவித்துள்ளார்

2024 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்று பிரச்சாரம் செய்த மக்கள் நீதி மய்யத்துக்கு சீட் வழங்கப்படவில்லை. ஆனாலும், அப்போதே அக்கட்சிக்கு ஒரு மாநிலங்களவை சீட் வழங்குவதாக ஒப்பந்தம் போடப்பட்டது.

விரைவில் தமிழகத்தில் 6 மாநிலங்களவை எம்.பிக்களின் பதவிகாலம் நிறைவடையவுள்ளது. எனவே இம்முறை கமல்ஹாசனுக்கு ராஜ்யசபா எம்.பி பதவி வழங்கப்படவுள்ளது. அதன் அடிப்படையிலேயே இந்த சந்திப்பு நடந்துள்ளதாக கூறப்படுகிறது

x