பெரம்பலூர்: மின் இணைப்பு பெற போலியாக கையொப்பமிட்ட நபருக்கு 3 ஆண்டுகள் சிறை


பெரம்பலூர்: வேப்பந்தட்டை வட்டம் பூலாம்பாடி கிராமத்தைச் சேர்ந்த ரா.பச்சமுத்து என்பவரின் கையெழுத்தை 2016ம் ஆண்டு அதே ஊரைச் சேர்ந்த காந்தி (47) என்பவர் போலியாக போட்டு, மின் இணைப்பு பெற முயற்சித்ததாக பச்சமுத்து அளித்த புகாரின் பேரில் பெரம்பலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

பெரம்பலூர் மாவட்ட குற்றவியல் நீதித் துறை நடுவர் எண் 1-ல் நடைபெற்று வந்த இந்த வழக்கில் விசாரணை முடிந்து, நீதித் துறை நடுவர் பிரேம்குமார் நேற்று தீர்ப்பளித்தார். அதில், போலியாக கையெழுத்திட்ட காந்திக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.2,000 அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

x