கனிமவளக் கொள்ளையை தடுக்க தவறிய புகார்: சாத்தூர் வட்டாட்சியர் உட்பட 7 பேர் சஸ்பெண்ட்


விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன்

விருதுநகர்: சாத்தூர் அருகே கனிமவளக் கொள்ளையைத் தடுக்கத் தவறியதாக சாத்தூர் வட்டாட்சியர் உள்ளிட்ட 7 பேர் நேற்று தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இ‌.குமாரலிங்கபுரம் பகுதியில் ஜவுளிப் பூங்கா அமையவுள்ள இடத்துக்கு அருகே பெரியகண்மாய் உள்ளது. இந்தக் கண்மாயில் விவசாயப் பயன்பாட்டுக்கு களிமண் எடுக்க அனுமதி பெற்றுக்கொண்டு சுமார் 20 அடி ஆழத்துக்குப் பள்ளம் தோண்டி கிராவல் மண்ணை சிலர் கொள்ளையடித்துள்ளனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலனுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இதில் கனிம வளக் கொள்ளை நடந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கனிம வளக் கொள்ளையைத் தடுக்க தவறியதாக சாத்தூர் வட்டாட்சியர் ராமநாதன், 4 வருவாய் துறை அதிகாரிகள், நீர்வளத்துறை உதவிப் பொறியாளர் மற்றும் உதவி வேளாண் அலுவலர் உள்ளிட்ட 7 பேரை தற்காலிக பணிநீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன் நேற்று உத்தரவு பிறப்பித்தார்.

x