மின்கம்பி உரசியதால் காவலர் குடியிருப்பில் பயங்கர தீ: மதுரையில் பரபரப்பு


மதுரை: மதுரை மாநகர் ரிசர்வ் லைன் ஆத்திகுளம் பகுதியில் உள்ள காவலர் குடியிருப்பு வளாகத்தில் உள்ள தென்னை மரம் மீது பலத்த காற்றுக்கு மின் கம்பி உரசியது. இதையடுத்து தென்னை மரம் தீப்பிடித்து எரியத் தொடங்கியது.

உடனடியாக மின்வாரிய அலுவலகத்துக்குத் தெரிவித்து மின் விநியோகத்தை துண்டித்த குடியிருப்புவாசிகள், தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தல்லாகுளம் தீயணைப்புத் துறையினர் தென்னை மரத்தில் பரவியை தீயை அணைத்தனர். அதன் பின்பு தென்னை மரம் அப்புறப்படுத்தப்பட்டது.

x