ராமேசுவரம்: ராமநாதசுவாமி கோயிலில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என இந்த சமய அறநிலையத் துறை அறிவித்துள்ளது.
இந்து சமய அறநிலையத் துறை வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு விவரம் வருமாறு: ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில், தமிழ் புலவர் 1, பிளம்பர் 1, காவலர் 18, கருணை இல்லம் பெண் காப்பாளர் 1, துப்புரவுப் பணியாளர் 27, தூர்வை (Sweeper) 26. கால்நடை பராமரிப்பு 2 ஆகிய காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். இந்து மதத்தை சார்ந்தவராகவும், இறை நம்பிக்கை உடையவராகவும், தமிழ்நாட்டைச் சேர்ந்தவராக இருத்தல் வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: இணை ஆணையர், செயல் அலுவலர், ராமநாதசுவாமி கோயில், ராமேசுவரம் – 623 526, ராமநாதபுரம் மாவட்டம். பதிவு தபாலில் விண்ணப்பிக்க கடைசி நாள் 12.03.2025 ஆகும்.
கூடுதல் தகவல் மற்றும் விண்ணப்பத்தை www.hrce.tn.gov.in மற்றும் https://rameswaramramanathar.hrce.tn.gov.in/ என்ற இணையதளங்களிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.