மதுரை: திருப்பரங்குன்றத்தில் பிப்ரவரி 18ம் தேதி கந்தூரி என்ற தகவலை சமூக வலைத்தளங்களில் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, முஸ்லிம் ஐக்கிய ஜமாத் நிர்வாகிகள் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தனர்.
மதுரை முஸ்லிம் ஐக்கிய ஜமாத் தலைவர் அப்துல் காதர் தலைமையில் சிக்கந்தர் உள்ளிட்ட நிர்வாகிகள், காவல் ஆணையர் அலுவலகத்தில் நுண்ணறிவுப் பிரிவு உதவி ஆணையர் பெத்ராஜிடம் புகார் மனு அளித்தனர். அதில், மதுரை முஸ்லிம் ஐக்கிய ஜமாத் பெயரை பயன்படுத்தி திருப்பரங்குன்றத்தில் பிப்ரவரி 18-ல் கந்தூரி என்ற பெயரில் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் செய்திக்கும், எங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. மதுரை முஸ்லிம் ஐக்கிய ஜமாத் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கில் செயல்படும் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.