திருப்பூர்: வீரபாண்டி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பழவஞ்சிபாளையம் பகுதியில் இளம்பெண் வசித்து வருகிறார். இவரது உறவினரான மண்ணரையை சேர்ந்த மணிமாறன் (29) என்பவர் கடந்த 2022ம் ஆண்டு திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, பாலியல் வன்கொடுமை செய்தார்.
இதுதொடர்பாக கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை 27-ம் தேதி பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் பேரில் கொங்குநகர் அனைத்து மகளிர் போலீஸார் வழக்கு பதிந்தனர். இந்த வழக்கு திருப்பூர் மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. மணிமாறனுக்கு 6 மாதம் சிறை தண்டனை மற்றும் ரூ.1000 அபராதம் விதித்து நீதிபதி ரஞ்சித்குமார் தீர்ப்பளித்தார். இவ்வழக்கில் உதவி அரசு வழக்கறிஞர் பானுமதி ஆஜரானார்.