செங்கோட்டையன் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு - பின்னணி என்ன?


செங்கோட்டையனின் தோட்டத்து வீட்டில் பாதுகாப்பு பணியில் போலீஸார்.

ஈரோடு: அத்திக்​கட​வு-அ​விநாசி திட்டகூட்​டமைப்பு சார்​பில், அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு கோவை மாவட்டம் அன்னூரில் பாராட்டு விழா நடந்​தது. முன்​னாள் அமைச்​சரும், கோபி அதிமுக எம்எல்​ஏவுமான கே.செங்​கோட்​டையன் இந்த விழாவைப் புறக்​கணித்​தார்.

இந்நிலை​யில், கோபி குள்​ளம்​பாளை​யத்​தில் உள்ள செங்​கோட்​டையனின் தோட்ட வீட்டுக்கு நேற்று இரவு காவல் ஆய்வாளர் மற்றும் 3 போலீ​ஸார் பாது​காப்பு பணியில் ஈடுபட்​டனர்.

இதுகுறித்து அதிமுக​வினரிடையே விசா​ரித்த​போது, “தனக்கு பாது​காப்பு வேண்​டும் என்று செங்​கோட்​டையன் போலீஸாரிடம் கோரவில்லை. உயர் அதிகாரிகள் உத்தர​வின் பேரில், அவர்​களாகவே செங்​கோட்​டையன் வீட்​டின் ​முன் பாது​காப்புப் பணி​யில் ஈடு​பட்​டுள்​ளனர்” என்​றனர்​.

x