தஞ்சை சோகம்: பேக்கரியில் கேக் வாங்கி சாப்பிட்ட பெண்ணுக்கு வாந்தி மயக்கம்; மருத்துவமனையில் சிகிச்சை


தஞ்சாவூர்: அம்மாப்பேட்டை அருகே உடையார்கோயிலைச் சேர்ந்தவர் கவுசல்யா. இவர், பிப்.8ம் தேதி அம்மாப்பேட்டை பேருந்து நிலையம் அருகேயுள்ள பேக்கரியில், பிளைன் கேக் வாங்கினார். பிப்.9ம் தேதி அதை சாப்பிட்ட சிறிது நேரத்தில் அவருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, தனியார் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். பின்னர், இதுகுறித்து அவர் அம்மாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில், தஞ்சாவூர் மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் டி.சித்ரா உத்தரவின்பேரில் உணவுப் பாதுகாப்பு அலுவலர் மணவழகன் நேற்று அம்மாப்பேட்டைக்குச் சென்று அந்த பேக்கரியை ஆய்வு செய்தார். அப்போது, அங்கு பிளைன் கேக் இல்லை.

அதேவேளையில், பேக்கரி சுகாதாரமின்றி இருந்ததால், கடைக்கு ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்தார். மேலும், கடையில் தரையில் சிமென்ட் பூச்சு பெயர்ந்திருந்ததால் கடையை மூடி சீரமைக்குமாறு உத்தரவிட்டார். இதைடுத்து, பேக்கரி உடனடியாக மூடப்பட்டது.

x