சென்னை: மக்கள் நீதி மையத்தின் சென்னை தென்கிழக்கு மாவட்டச் செயலாளர் ஓம் பிரகாஷ் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.
இது தொடர்பாக அதிமுக தரப்பில் வெளியான செய்திக்குறிப்பில், ‘அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி அவர்களை, தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் நேற்று (10.2.2025 – திங்கட் கிழமை), மக்கள் நீதி மையத்தின் சென்னை தென்கிழக்கு மாவட்டச் செயலாளர் ஓம் பிரகாஷ் அவர்கள் நேரில் சந்தித்து, தன்னை கழகத்தில் இணைத்துக்கொண்டார்.
இந்நிகழ்வின்போது, கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவுச் செயலாளர் ராஜ் சத்யன், தென் சென்னை தெற்கு (கிழக்கு) மாவட்டக் கழகச் செயலாளர் அசோக், கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு துணைச் செயலாளர் கிருபாகரன் ஆகியோரும் உடன் இருந்தனர்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது