கோவை: அவிநாசி சாலையில் கூப்பிடு விநாயகர் கோயிலுக்கு சொந்தமான 273 சதுர அடி கொண்ட ஓட்டு வீட்டை தனி நபர் ஆக்கிரமித்து அனுபவித்து வந்தார்.
ஆக்கிரமிப்பு இடத்தை மீட்கும் வகையில் இந்து சமய அறநிலையத்துறை சட்டப்பிரிவு 78-ன் கீழ் வழக்கு தொடரப்பட்டது. இதனிடையே, அறநிலையத்துறை இணை ஆணையர் ரமேஷ் உத்தரவின்படி, உதவி ஆணையர் இந்திரா முன்னிலையில் அலுவலர்கள், பணியாளர்கள் காவல்துறை பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டனர். இதன் மதிப்பு ரூ.20 லட்சமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.