திருச்சி தண்ணீர் தொட்டியில் கிடந்தது உணவுப் பொட்டலம்தான்: மாவட்ட ஆட்சியர் தகவல்


திருச்சி: திருச்சி மாநகராட்சி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் கிடந்தது உணவு பொட்டலம் தான் என திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: திருச்சி மாநகராட்சி 20-வது வார்டு பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனிதக் கழிவு கலந்ததாக புகார்கள் எழுந்துள்ளது. ஆனால், அந்த தண்ணீர் தொட்டியில், அப்பகுதியில் வசிக்கக் கூடிய யாரோ ஒரு நபர் உணவுப் பொட்டலங்களை வீசி விட்டு சென்றுள்ளார். இது குறித்து முறையான விசாரணை நடைபெற்று வருகிறது. பொய்யான தகவல்களை பரப்பினால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

மணப்பாறை தனியார் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரத்தில், யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்ட ரீதியான, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

x