சுப.உதயகுமாருக்கு எதிரான லுக்-அவுட் நோட்டீஸ் திரும்ப பெறப்பட்டுள்ளது: மத்திய அரசு தகவல்


மதுரை: கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டக் குழு தலைவர் சுப.உதயகுமாருக்கு எதிரான லுக்-அவுட் நோட்டீஸ் திரும்பப் பெறப்பட்டதாக, உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது.

திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டங் களில் பங்கேற்றவர்கள் மீது 248 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. பின்னர், 200-க்கும் மேற்பட்ட வழக்குகளை தமிழக அரசு திரும்பப் பெற்றது. இந்த குற்ற வழக்குகளில் எனக்கு நீதிமன்றம் இதுவரை எந்த தண்டனையும் வழங்கவில்லை.

இந்நிலையில், குற்ற வழக்கு களை காரணம் காட்டி எனது பாஸ்போர்ட் முடக்கப்பட்டது. இதனால் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, பாஸ் போர்ட்டை திரும்பப் பெற்றேன். இருப்பினும், நான் வெளிநாடு செல்ல முடியாதபடி எனக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ் (தேடப்படும் குற்றவாளி) இதனால், என்னால் வெளிநாடு களுக்குச் செல்ல முடிவில்லை.

லுக்-அவுட் நோட்டீஸை திரும்பப் பெறக்கோரி, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந் தேன். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், எனக்கு எதிரான லுக்-அவுட் நோட்டீஸை இடைக்காலமாக நிறுத்தி வைத்து, நான் வெளிநாடு செல்ல அனுமதி வழங்கி உத்தரவிட்டது.

மீண்டும் சிங்கப்பூர் செல்ல விண்ணப்பித்தபோது, எனக்கு எதிரான லுக்-அவுட் நோட்டீஸ் நிலுவையில் இருப்பது தெரிய வந்தது. எனக்கு எதிரான லுக்-அவுட் நோட்டீஸ் நடவடிக்கையை திரும்பப் பெற உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறப்பட்டிருந்தது. மனுவில் இந்த மனு நீதிபதி நிர்மல்குமார் முன் விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு தரப்பில், 'உதயகுமாருக்கு எதிரான லுக்-அவுட் நோட்டீஸ், கடந்த 2020-ம் ஆண்டில் திரும்பப் பெறப்பட்டுள்ளது. மனுதாரர் வெளிநாடு செல்லலாம் எனக் கூறப்பட்டது. இதை பதிவு செய்து வழக்கை முடித்து வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

x